உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரவில் உலா வரும் யானை; அச்சத்தில் அளக்கரை மக்கள்

இரவில் உலா வரும் யானை; அச்சத்தில் அளக்கரை மக்கள்

குன்னுார், : குன்னுார் அளக்கரை கிராமத்தில் இரவில் குடியிருப்பு பகுதிக்கு உலா வரும் ஒற்றை கொம்பன் யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் அருகே உள்ள அளக்கரை கிராமத்தில் கரடி, சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை கொம்பன் யானை உலா வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கட்டபெட்டு வனத்துறை சார்பில் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'இரவு நேரத்தில் தனியாக யாரும் வெளியே நடமாட வேண்டாம்; யானையை பார்த்தால் சப்தம் எழுப்பாமல் வனத்துறைக்கு தகவல் தர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ