உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சீரமைக்கப்படாத தடுப்பு சுவர் வாகனம் செல்ல சிரமம்

சீரமைக்கப்படாத தடுப்பு சுவர் வாகனம் செல்ல சிரமம்

கோத்தகிரி;கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில், இடிந்த கட்டடத்தை சீரமைக்காததால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி பேரூராட்சி சிறப்பு அந்தஸ்து பெற்றது. இங்குள்ள, 21 வார்டுகளில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நாள்தோறும், பல்வேறு தேவைகளுக்காக அலுவலகத்திற்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒப்பந்ததாரர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களின் வாகனங்கள் அலுவலகத்திற்குள் வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையில், பேரூராட்சி அலுவலகத்திற்குள் செல்லும் சாலையில் உள்ள தடுப்பு சுவர் கட்டடம் சரிந்து விழுந்தது. இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து மழை தீவிரம் அடைந்ததால், கட்டடம் பாதிக்காமல் இருக்க, பிளாஸ்டிக் 'தார்பாலின்' மூலம் மூடப்பட்டது. மழை ஓய்ந்த நிலையிலும், இடிந்த தடுப்பு சுவர் கட்டடம் சீரமைக்கப்படவில்லை. வாகனங்கள் உள்ளே செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அலுவலக தேவைக்காக வரும் வாகனங்களை ஒதுக்கி நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசர தேவைக்கு சாலையில் வாகனங்களை நிறுத்தும் பட்சத்தில், நெரிசல் ஏற்படுவதுடன், போலீசார் அபராதம் விதிக்கின்றனர். எனவே, சரிந்து விழுந்த தடுப்பு சுவர் கட்டடத்தை பேரூராட்சி நிர்வாகம், விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்