/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாழடைந்த கட்டடங்களில் சமூக விரோத செயல்; போதை பொருள் பயன்பாடு அதிகரிப்பு
பாழடைந்த கட்டடங்களில் சமூக விரோத செயல்; போதை பொருள் பயன்பாடு அதிகரிப்பு
குன்னுார்: குன்னுாரில், 12வது வார்டுக்கு உட்பட்ட உமரி காட்டேஜ் பகுதியில் நுாற்றுகணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கிருந்து வண்ணார பேட்டை செல்லும் நடைபாதையோரம் பாழடைந்த கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடங்கள் சுற்றியும் முட்புதர்கள் வளர்ந்துள்ளது.சமீப காலமாக இந்த இடத்தில் சில இளைஞர்கள் போதை பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. பல்வேறு சமூக விரோத செயல்களும் நடந்து வருவதை அறிந்து சமீபத்தில் போலீசார் ஆய்வு செய்து, தற்காலிக தடை ஏற்படுத்தினர்.எனினும், மீண்டும் இந்த இடத்தில், மாலை, இரவு நேரங்களில் போதை பொருட்கள் பயன்படுத்தி வருவதாக, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, நகராட்சி அதிகாரிகள், போலீசார் இணைந்து இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.