வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் போட்டிக்கான விண்ணப்பம் வினியோகம்
கோத்தகிரி; தோட்டக்கலை துறை மூலம், வீட்டு காய்கறி தோட்டம் அமைத்த விவசாயிகளுக்கு போட்டிக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது.கோத்தகிரி நேரு பூங்காவில், 13வது காய்கறி கண்காட்சி, மே மாதம் 3, 4ம் தேதிகளில் நடக்கிறது. அதில், மாவட்டத்தில், சிறந்த முறையில் வீட்டு காய்கறி தோட்டம் அமைத்த விவசாயிகளுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது.இப்போட்டிக்கான விண்ணப்பம், கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில், 11ம் தேதி காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணிவரை வழங்கப்பட்டுள்ளது.போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் விண்ணப்பத்தை நேரில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும், 21ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய கட்டணத்துடன், செலுத்த வேண்டும்.சிறந்த முறையில் வீட்டு காய்கறி தோட்டம் அமைத்த விவசாயிகளின் தோட்டத்தை, தேர்வு செய்து குழு பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.