மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
பந்தலுார்;நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்த பணிகளை பிரிப்பதில், ஆளும் கட்சி நிர்வாகிகள்; நகராட்சி தலைவர்; கவுன்சிலர்களிடையே மக்கள் முன்னிலையில் கடும் வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பந்தலுார், நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், 52 பேர் உள்ளனர். இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள், 'தற்போது டெண்டர் விடப்படும், 4- கோடி 80 லட்சம் ரூபாய்க்கான டெண்டரில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை தங்களுக்கு வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி, நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவிடம் மனு அளித்துள்ளனர்.இந்நிலையில், நேற்று மதியம் கட்சி நிர்வாகிகள், நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அலுவலக வளாகத்தில் மக்கள் முன்னிலையில், தலைவர் சிவகாமி, துணை தலைவர் நாகராஜ் ஆகியோரிடம், 'தங்களுக்கு பணி ஒதுக்க வேண்டும்,' என, கூறி உள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 'தலைவர் தனிப்பட்ட நபர் ஒருவரை கொண்டு, கட்சி நிர்வாகிகளை மிரட்டுகிறார்; உரிய மரியாதை தருவதில்லை; கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுகிறார்,' என, நிர்வாகிகள் கூறியதால், இரு தரப்பினருடைய மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. அங்கு வந்த தி.மு.க., நகர செயலாளர் சேகர், கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அப்போது, 'தங்களுக்கு பணி ஒதுக்கவில்லை என்றால் தேர்தலில் இதன் பாதிப்பு எதிரொலிக்கும்,'என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவத்தால் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025