மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலூர்;பந்தலுார் டியூஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கிராமிய கலை விழா நடந்தது.ஆசிரியை சைமா வரவேற்றார். பள்ளி தாளாளர் உஜுவல் தீப் காடேஸ்வரா தலைமை வகித்தார். ரைட் பியூச்சர் அகாடமி முதல்வர் தனராஜ் முன்னிலை வகித்தார். ரோட்டரி கிளப் நிர்வாகிகள் எல்டோ தாமஸ், வக்கீல் அப்சல்ஜா, பள்ளி இயக்குனர் ராஜசேகர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.அதில், பந்தலூர் மற்றும் தேவாலா சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 16 குழுக்களை சேர்ந்த மாணவ, மாணவிகள், கிராமிய நடனத்தில் அசத்தினர். முதல் இடத்தை பிடித்த நடன குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது. பள்ளி துணை முதல்வர் சேகர் நன்றி கூறினார்.
03-Oct-2025