உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டிரைவர் மீது தாக்குதல்: ஆட்டோ எரிப்பு; கூடலுார் போலீசார் தீவிர விசாரணை

டிரைவர் மீது தாக்குதல்: ஆட்டோ எரிப்பு; கூடலுார் போலீசார் தீவிர விசாரணை

கூடலுார்; கூடலுார், தருமகிரி அருகே, ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தியது; ஆட்டோ எரிக்கப்பட்டது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கூடலுார் தருமகிரி பகுதியை சேர்ந்தவர் ஜோபி,38. வாடகை ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு, ஆட்டோவில் தர்மபுரி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் வீட்டின் அருகே ஒரு கும்பல் தாக்கியுள்ளது. தொடர்ந்து, ஆட்டோ எரிக்கப்பட்டது. அதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். நியூஹோப் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.போலீசார் கூறுகையில்,' முன்பகை காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது. தாக்கியவர்களை தேடி வருகிறோம். ஆட்டோ எரிக்கப்பட்டது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !