உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண்வயலில் சிறுத்தை நடமாட்டம்: கண்காணிக்க தானியங்கி கேமராக்கள்

மண்வயலில் சிறுத்தை நடமாட்டம்: கண்காணிக்க தானியங்கி கேமராக்கள்

கூடலுார்:கூடலுார் மண்வயல் அருகே, தனியார் எஸ்டேட் தொழிலாளர்களை விரட்டிய சிறுத்தையை, கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.கூடலுார் மண்வயல் கம்மாத்தி பகுதியில், தனியார் எஸ்டேட்டில், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த சிறுத்தை அவர்களை விரட்டி உள்ளது. அவர்கள் அலறி அடித்து ஓடி தப்பினர்.வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இருப்பதை பார்த்து, பட்டாசு வெடித்து விரட்டினர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.கூடலுார் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் நேற்று, மாலை அப்பகுதியில் ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் நான்கு தானியங்கி கேமராக்கள் பொருத்தினர்.வனத்துறையினர் கூறுகையில், 'அப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை, வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அதனை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி உள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி