மேலும் செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி விபத்து
1 hour(s) ago
தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் கள்ளி செடிகள்
1 hour(s) ago
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், 30 இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மழை அளவை துல்லியமாக கண்காணித்து, அதிக மழை பெய்யும் நேரங்களில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், உயிரிழப்பு மற்றும் பொருள் சேதத்தை தவிர்க்கவும், குறைக்கவும் தமிழக அரசு, மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், தானியங்கி மழை மானிகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. நீலகிரியை பொறுத்தவரை, 30 இடங்களில் தானியங்கி மழை மானிகளை அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கோத்தகிரி வட்டத்தில், கோத்தகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் தானியங்கி மழைமானி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி, நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இதர, 29 இடங்களிலும், படிப்படியாக தானியங்கி மழைமானிகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago