உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுற்றுச்சூழலை பாதுகாக்க துணிப்பை விழிப்புணர்வு

சுற்றுச்சூழலை பாதுகாக்க துணிப்பை விழிப்புணர்வு

கோத்தகிரி; கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப்பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், சுற்றுச்சூழலை பாதுகாக்க துணிப்பை பயன்பாடு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் தலைமை வகித்து, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, துணிப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.வன காப்பாளர் வினோத், வன வளம், மரங்கள் மற்றும் வன உயிரின பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதம் மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மேகராஜ், கமலா மற்றும் பணியாளர் செந்தமிழ் செல்வி உட்பட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சுற்றுச்சூழல் வாசகங்கள் பொறித்த துணிப்பை பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை