உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மரத்தில் அமர்ந்திருந்த கரடி; பூங்கா ஊழியர்கள் ஷாக்

மரத்தில் அமர்ந்திருந்த கரடி; பூங்கா ஊழியர்கள் ஷாக்

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரத்தின் மீது ஏறிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி நகரில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று சுற்றி வருகிறது. வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கரடி நகர்புறத்தில் இரவில் உலா வருகிறது. கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை முன் உள்ள மரத்தின் மீது கரடி அமர்ந்திருந்தது. பூங்கா ஊழியர்கள் 'டார்ச்' வெளிச்சத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பூங்காவுக்கு வந்த வனத்துறையினர் கரடியை மரத்திலிருந்து இறக்க முயற்சி செய்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கரடியால் மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்தது. பின், மெதுவாக இறங்கிய கரடி அருகிலிருந்த வனப்பகுதிக்குள் ஓடியது. இதனால், பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி