ரன்னிமேடு ரயில் நிலையத்தில் கரடி உலா
குன்னுார்; குன்னுார் ரன்னிமேடு ரயில் நிலையத்துக்கு வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குன்னுார் காட்டேரி பூங்கா, டான்டீ குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது கரடிகள் 'விசிட்' செய்வதால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கரடி ஒன்று பகல் நேரத்திலேயே, காட்டேரி பூங்கா அருகே ரன்னிமேடு ரயில் நிலையத்திற்கு வந்து சென்றது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் கரடியை கண்டு அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.