மேலும் செய்திகள்
காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்
8 minutes ago
தென் மாநில தேயிலை ஏலத்தில் ரூ.46.18 கோடி வருவாய்
8 minutes ago
மாவனல்லாவில் ஆக்கிரமிப்பு நிலத்தில் புனரமைப்பு பணி
9 minutes ago
58வது தேசிய நூலக நிறைவு விழா
10 minutes ago
ஊட்டி: ஊட்டி காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பைரவி திவ்ய பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஊட்டி காந்தள் பகுதியில், அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான இந்த ஆலயத்தில், ஆண்டு திருவிழா மற்றும் முக்கிய விழா நாட்களில், ஐயனுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பத்தியுடன் கவாமி தரிசனம் செய்கின்றனர். நேர்த்திக்கடனும் செலுத்துகின்றனர். இந்நிலையில், ஈஷா தென் கைலாய பக்தி பேரவை சார்பில், நேற்று ஆலயத்தில், பைரவி திவ்ய பூஜை சிவாங்கா தெம்பு நிகழ்ச்சி, கைலாயா வாத்திய இசை முழங்க நடந்தது. இந்த நிகழ்வு, பிப்., 15ம் தேதி ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரிக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், தென் கைலாயம் வெள்ளிங்கிரி யாத்திரை செல்வதற்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமான் மற்றும் தேவி அருளில் திளைத்தனர்.
8 minutes ago
8 minutes ago
9 minutes ago
10 minutes ago