உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி

கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி

பந்தலுார்: பந்தலுார் அருகே எருமாடு குதிரம்பம் பகுதியில் பிரசித்தி பெற்ற துர்கா பகவதி கோவிலில் மகர செவ்வாய் மஹோற்சவம் நேற்று முன்தினம் காலை நடை திறப்புடன் துவங்கியது.அதில், மகா கணபதி ஹோமம், நிர்மால்ய தரிசனம் அபிஷேகம், உஷபூஜை, கொடியேற்றத்துடன் நடந்தது. துர்க்கையம்மன்,கரியாத்தான் மற்றும் துர்காதேவி, பகவதி வெள்ளாட்டு நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, நேற்று சர்வ ஐஸ்வர்ய பூஜை, கலசாபிஷேகம், அன்னதானம், நடை திறப்பு, தீபாராதனை, பகவதி சேவை பூஜைகள் நடந்தது. அதில், அம்மன், பகவதி, கரியாத்தான் வேடமிட்ட, 'வெளிச்சபாடுகள்' எனப்படும் சாமியாடிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். சிறப்பு பூஜைகளை ஜெயராம்பட் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீனிவாஸ், விஜயா, சங்கீதா மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ