உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / படகு இல்ல செல்பி ஸ்பாட்

படகு இல்ல செல்பி ஸ்பாட்

ஊட்டி; ஊட்டியில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் உட்பட, முக்கிய சுற்றுலா மையங்களில், விடுமுறை நாட்களில், 5,000 முதல், 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.கடந்த சில நாட்களாக, பனியுடன், குளிரான காலநிலை நிலவி வருகிறது. எனினும், கேரளா, கர்நாடக மாநிலங்கள் உட்பட சமவெளி பகுதிகளில் இருந்து, திரளான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிட்டு, சுற்றுலா மையங்களை கண்டுக்களித்து வருகின்றனர்.குறிப்பாக, பல பயணிகள் ஊட்டி படகு இல்லத்தில் காணப்பட்டனர். அவர்கள், ஏரி கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள 'செல்பி ஸ்பாட்டில்' புகைப்படம் எடுத்து, படகு சவாரி செய்து குதுாகலம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை