மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி:ஊட்டி படகு இல்லத்தில் உள்ள. 'செல்பி ஸ்பாட்டில்' போட்டோ எடுக்க சுற்றுலா பயணிகள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா அழகை கண்டு களிப்பதுடன், படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்வதை விரும்புகின்றனர். படகு சவாரிக்காக வரும் பார்வையாளர்களை கவரும் வகையில், படகு இல்லம் ஏரி கரையோரத்தில், இரண்டு இடங்களில் 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான நேற்று, படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், 'செல்பி ஸ்பாட்டில்' நின்று போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
03-Oct-2025