உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் உலா வந்த காட்டுப்பன்றி; ஓட்டம் பிடித்த சிறுவர்கள்

சாலையில் உலா வந்த காட்டுப்பன்றி; ஓட்டம் பிடித்த சிறுவர்கள்

கோத்தகிரி; கோத்தகிரி சாலைகளில் காட்டுப்பன்றிகள் உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோத்தகிரி பஜார் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதே போல, மார்க்கெட் பகுதியில், கடைகளில் இருந்து வெளியேறும் இறைச்சி மற்றும் காய்கறி கழிவுகள் மார்க்கெட் வாகனம் நிறுத்தம் அருகே பொது இடத்தில் கொட்டப்படுகிறது. இந்த கழிவுகளை உண்ணுவதற்காக, காட்டு பன்றிகள் வருவது அதிகரித்துள்ளது. பெரும்பாலான நேரங்களில், குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் இருந்து, பன்றிகள் நகரின் முக்கிய சாலையில், 'ஹாயாக' வருவது அதிகரித்துள்ளது. இவ்வாறு நேற்று வந்த பன்றிகளை நாய்கள் துரத்தியதால், அவை அங்கும், இங்கும் ஓடியதை கண்ட சிறுவர்கள் ஓட்டம் பிடித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரவேணு கேத்தரின் வாட்டர் பால்ஸ் பகுதியில், பன்றி தாக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே, பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை