காலை உணவு திட்டம் ஆய்வு; மாணவர்களிடம் கருத்து கேட்பு
கோத்தகிரி; கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவு திட்டம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாநில அரசு, காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி, பள்ளி மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.அதன்படி, கோத்தகிரி வட்டார வளமைய பயிற்றுனர் செந்தில்குமார், ஒரசோலை அரசு நடுநிலை பள்ளிக்கு சென்று, உணவு தரத்தை ஆய்வு செய்தார். மேலும் உணவை உண்டு சோதித்து, மாணவர்களிடம் தரம் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உட்கூறுகளில், எண்ணும் எழுத்தும் மற்றும் முன் பருவக்கல்வி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.நிகழ்ச்சியில், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி, துாய்மை பணியாளர், 10 மாத நிலுவை தொகையினை, பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் முன்னிலையில், துாய்மை பணியாளர் தமிழ் செல்வியிடம் வழங்கினார். அதில், ஆசிரியைகள் கமலா, நளினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.