மேலும் செய்திகள்
தீபாவளிக்காக பி.எஸ்.என்.எல்., சலுகை அறிவிப்பு
16-Oct-2025
கூடலுார்: கூடலுாரில் பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கூடலுார் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சேவை மையம் திறப்பு மற்றும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேவை மையத்தை பி.எஸ்.என்.எல்., மாவட்ட துணை பொது மேலாளர் மனோஜ் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது, 'நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்., சேவை அனைத்து கிராமங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. கூடலுார், குன்னுார், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் வாடிக்கையாளர் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. 4ஜி சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சிக்னல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேலும், அதிவேக பிராட்பேண்ட் வழங்கப்பட்டு வருகிறது. வாடிக் கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., சேவையை அதிக பயன்படுத்தி வருகின்றனர்,' என்றார். தொடர்ந்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி துவங்கியது. பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, துவங்கியது. ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில், பி.எஸ்.என்.எல்., உதவி பொது மேலாளர்கள் விமல், ராஜேஷ் உள்ளிட்ட பங்கேற்றனர்.
16-Oct-2025