மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
ஊட்டி : ஊட்டியிலிருந்து தீட்டுக்கல் வழியாக, மேல் கவ்வட்டி, குருத்துகுளி, நஞ்சநாடு மற்றும் பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் குழியில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போதிய தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருபுறம் வளர்ந்துள்ள முட்புதரால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியில் உள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025