உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முட்டைகோஸ் அறுவடை தீவிரம்; மண்டிகளில் விற்பனை அதிகரிப்பு

முட்டைகோஸ் அறுவடை தீவிரம்; மண்டிகளில் விற்பனை அதிகரிப்பு

கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட முட்டைக்கோஸ், லாரிகளில் ஏற்றி, மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தேயிலை விவசாயத்தை அடுத்து, நீர் ஆதாரமுள்ள விளைநிலங்களில், அதிக பரப்பளவில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, போதிய மழை பெய்து, ஓய்ந்த நிலையில், தயாரான முட்டைக்கோஸை, விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.தற்போது, ஒரு கிலோ முட்டைக் கோசுக்கு, மேட்டுப்பாளையம் மண்டிகளில், 20 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.உள்ளூர் மார்க்கெட்டில், 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.முட்டைக்கோஸ் பயிர் செய்ய, அதிக முதலீடு தேவை என்பதால், இந்த விலை போதுமானதாக இல்லை. இருப்பினும், விவசாயிகள் அறுவடையில் தீவிரம் கட்டி வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்த முட்டைகோஸ், உள்ளூர் மார்க்கெட்டில் தேவை குறைவாக இருப்பதால், மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பனை செய்வதற்காக, லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ