உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மானியத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் கூடலுார் விவசாயிகளுக்கு அழைப்பு

மானியத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் கூடலுார் விவசாயிகளுக்கு அழைப்பு

ஊட்டி:'தாயுமானவர் திட்டத்தின் கீழ், சினையுற்ற கறவை பசுக்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் பெற கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்,'என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: மாநில அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுள்ள கறவை பசுக்களுக்கு, 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் செயல்படுத்தபடுகிறது. இத்திட்டத்தின் கீழ் , மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள, கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தில், 100 ஊரக ஏழைகள் கால்நடை விவசாயிகளின் சினையுள்ள கறவை பசுக்களுக்கு, 50 சதவீதம் மானியத்துடன் ஊட்டச்சத்து (அடர் தீவனம், தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கூடலுார் ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அருகாமையில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை