மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கருமத்தம்பட்டி:வாகராயம்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த, 14ம் தேதி பூச்சாட்டு திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. 20ம் தேதி புற்றுக்கண் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் கத்தி போடுதலும், குதிரை மீது சக்தி அழைத்தலும் நடந்தது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள் ராகு தீபம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அச்சு வெல்ல கோட்டை கட்டி, கரும்பிலே பந்தல் அமைத்து, வெற்றிலை தோரணம் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
03-Oct-2025