மேலும் செய்திகள்
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
03-Mar-2025
கூடலுார்; முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனப்பகுதிகளில், உண்ணி செடிகள் அகற்றும் பணியை, சென்னை ஐகோர்ட் அமைத்த குழுவினர் ஆய்வு செய்தனர்தமிழகத்தில் வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, கூடலுார் உள்ளிட்ட தமிழக வனக்கோட்டங்களில் உண்ணி செடிகள் அகற்ற உத்தரவிட்டனர். இதற்கான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை கண்காணிக்க ஐகோர்ட் தனி குழு அமைத்துள்ளது.இக்குழுவினர், தமிழக முழுவதும் உண்ணி செடிகள் அகற்றும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, இக்குழுவில் இடம் பெற்றுள்ள, சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் மோகன், சந்தானராமன் ஆகியோர் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனப்பகுதியில் உண்ணி செடிகள் அகற்றும் பணிகளை, இரண்டு நாட்கள் ஆய்வுகள் செய்தனர். ஆய்வு பணிகள் நிறைவு பெற்றன. ஆய்வின் போது, முதுமலை கலை இயக்குனர் கிருபா சங்கர், முதுமலை துணை இயக்குனர் வித்யா, மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், மற்றும் வன அதிகாரிகள் உடனிருந்தனர்.வனத்துறையினர் கூறுகையில், ' மாநிலத்தில் உள்ள உள்ள வனக்கோட்டங்களில் மாதம், 125 ஏக்கர் பரப்பளவில் உண்ணி செடிகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதுமலை மற்றும் மசினகுடி பகுதியில், உண்ணி செடிகள் அகற்றும் பணியை இக்குழுவினர் ஆய்வு செய்தனர்,' என்றனர்.
03-Mar-2025