உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உயிலட்டியில் தடுப்பணை சாத்தியம் குறித்து கலெக்டர் ஆலோசனை

உயிலட்டியில் தடுப்பணை சாத்தியம் குறித்து கலெக்டர் ஆலோசனை

கோத்தகிரி, : கோத்தகிரி அருகே, கூக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட, உயிலட்டி நீர்வீழ்ச்சியில், தடுப்பணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, கலெக்டர் லட்சுமி பவ்யா ஆலோசனை நடத்தினார்.இதற்கான ஆய்வின்போது,'கோடைகாலத்தில் கூக்கல் மற்றும் கக்குச்சி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அதனை போக்குவதற்கு, புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஏதாவது நீர் ஆதாரம் தேர்வு; இயல்பு நீரின் தரம் மற்றும் நீர் ஆதாரத்தின் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கான தகுந்த ஆய்வுகள் மேற்கொண்டு திட்டமிட வேண்டும்,' என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் கவுஷிக், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை