மேலும் செய்திகள்
ஊட்டி மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள்
24 minutes ago
பந்தலுாரில் பறக்கும் நீலப்புலி வண்ணத்து பூச்சிகள்
25 minutes ago
குன்னுார்: நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போட்டியில், தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று அசத்திய, குன்னுார் மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. குன்னுாரில், 'ஆலன் திலக்' பள்ளியின், பிளாக் நிஞ்சா கராத்தே கிளப் மாணவ, மாணவிகள் கோத்தகிரியில் நடந்த மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போட்டியில் பங்கேற்றனர். அதில், 14 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களை கட்டா மற்றும் குமுத்தே பிரிவுகளில் வென்றனர். இவர்களுக்கு 'இண்டோ ஜப்பான்' அமைப்பின் இயக்குனர் ஷிகான் கதிரேசன், மாவட்ட கராத்தே பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பதக்கங்களை வழங்கினர். சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கு குன்னுார் சி.எஸ்.ஐ., வெஸ்லி தேவாலய அரங்கில் பாராட்டு விழா நடந்தது. குன்னுார் ரெஸ்லி ஆலய பங்கு தந்தை ராட்ரிக் பர்ணபாஸ் பாராட்டு தெரிவித்தார். அதில், பிளாக் நிஞ்சா கராத்தே கிளப் பயிற்சியாளர்கள் ஜான், நித்யா மற்றும் நடுவர்களாக பங்கேற்ற மாணவர்கள், மாணவியருக்கு முதன்மை பயிற்சியாளர் ஜோசப் பாக்கியசெல்வம் பாராரட்டு தெரிவித்தார்.
24 minutes ago
25 minutes ago