உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 100 அடி கம்பத்தில் ஏறி தேசியக்கொடியை சரி செய்த தொழிலாளருக்கு பாராட்டு

100 அடி கம்பத்தில் ஏறி தேசியக்கொடியை சரி செய்த தொழிலாளருக்கு பாராட்டு

குன்னுார், ;குன்னுாரில், 100 அடி உயர கம்பத்தில் சிக்கிய தேசியக்கொடியை விரைவாக ஏறி, சீரமைத்த தொழிலாளரை அனைவரும் பாராட்டினர்.குன்னுார் வெலிங்டன் போர் நினைவு சதுக்கம் அருகே, 100 அடி உயர கம்பத்தில், தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்கவிடப்பட்டுள்ளது. இக்கொடி கம்பத்தின் உச்சியில் இருந்த அசோக சக்கரா சின்னத்தில் சிக்கியது. ராணுவ அதிகாரிகள் கிரேன் வரவழைத்து, அதில் ஏறி சரி செய்ய முயற்சி செய்தனர். 70 அடி உயரத்திற்கு மேல் கிரேன் கொண்டு செல்ல முடியவில்லை. அப்போது அங்கு வந்த கம்பிச்சோலை கிராமத்தை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளர் ராஜா,45, அதனை சரி செய்வதாக கூறி, சில நிமிடங்களில் கம்பத்தில் ஏறி கொடியை சரி செய்து கீழிறங்கினார். அவரை, ராணுவ அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை