பந்தலுார் அருகே சமுதாய சுகாதார விழிப்புணர்வு
பந்தலுார்; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை வட்டார சமுதாய சுகாதார நிலையத்தில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு இணைந்து பெண்களுக்கான பருவகால சுகாதாரம் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜித் வரவேற்றார். பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து பேசினார். டாக்டர்கள் சவுந்தர், தபசியா ஆகியோர், 'பருவகால பெண்களின் உடல் வளர்ச்சி, உடல் மாற்றங்கள், பருவ கால பராமரிப்புகள், மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்,' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பல் டாக்டர் சிலம்பரசன் பற்களை பாதுகாப்பாக பராமரிப்பது குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் நர்சிங் பயிற்சி மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். -உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், டாக்டர்கள் மாசிலாமணி, பிரவீன் ஆகியோர் விளக்கமளித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் ஆகாஷ், பரணி மற்றும் செவிலியர்கள், பங்கேற்றனர். கப்பலா ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் சுகைப் நன்றி கூறினார்.