உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காங். கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

காங். கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், காங்., கட்சி சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பந்தலுாரில் நெல்லியாளம் நகர காங்., சார்பில் நடந்த தீப்பந்தம் ஏந்திய ஆர்ப்பாட்டத்திற்கு, நகர தலைவர் ஷாஜி தலைமை வகித்தார். அதில், 'வன விலங்குகளால் மனிதர்கள் இறப்பதை தடுக்க வேண்டும்; செக்சன்-17 இடங்களில் குடியிருக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தவறினால் தமிழக அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும்,' என, வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் அனஸ்எடாலத், மாவட்ட இளைஞர் காங்., துணைத் தலைவர் ஹாரிஸ், நிர்வாகிகள் தாஹிர், ஜெய்சல், அஷ்பக், ஹரிஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், பாட்டவயல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்ரப் துவக்கி வைத்தார். கிராம கமிட்டி தலைவர் ஜெரோம் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் அசரப், மாவட்ட பொது செயலாளர் விஷ்ணுஜித், வட்டார செயலாளர் அனு ஜோசப், லிசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ