உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி லோயர் பஜாரில் கால்வாய் அமைக்கும் பணி

ஊட்டி லோயர் பஜாரில் கால்வாய் அமைக்கும் பணி

ஊட்டி;ஊட்டி லோயர் பஜாரில் கழிவு நீர் செல்ல கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து மேம்பாட்டு பணிகள் அந்தந்த திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி லோயர் பஜார் சாலையில் கோடப்பமந்து கால்வாய் ஒட்டிய இடத்தில், கழிவுநீர், மழை நீர் வழிந்தோட வழியின்றி காணப்பட்டது. பருவமழை சமயத்தில் லோயர் பஜாரில், கழிவுநீருடன் மழைநீர் கலந்து பேரிடர் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இச்சாலையில் மூன்று இடங்களில் கால்வாய் அமைத்து அதனை கோடப்பமந்து கால்வாயில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அங்கு பொக்லைன் உதவியுடன், 20 அடி அகலம், 10 அடி ஆழத்திற்கு மண் தோண்டி எடுக்கப்பட்டு, கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை