ஆலோசனை கூட்டம்
பந்தலுார்; கூடலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பா.ஜ., நெல்லியாளம் நகரம், பந்தலுார் மேற்கு, கிழக்கு, சக்தி கேந்திரம் பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. நெல்லியாளம் மண்டல துணைத் தலைவர் யோகேஸ்வரன் வரவேற்றார். நகர தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். அதில், கட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட பொது செயலாளர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.