உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஊட்டி; நீலகிரியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார். அதில், ஊட்டி அரசு கலைக் கல்லுாரி மாணவ, மாணவிகள் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்று,'லேபிள்களை கவனிப்போம் - தரமான பொருளை வாங்குவோம்; பசுமைக்கு செல்வோம் -சுற்றுச்சூழலை காப்பாற்றுவோம்,' உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி சேரிங்கிராஸ்,தேவாங்கர் திருமண மண்டபம் சென்று நிறைவடைந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை