உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பணி நிறுத்தம் பயணிகள், டிரைவர்கள் பாதிப்பு

குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பணி நிறுத்தம் பயணிகள், டிரைவர்கள் பாதிப்பு

குன்னுார்,; குன்னுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நிறுத்தப்பட்டதற்கு தீர்வு காணாமல் உள்ளதால், நாள்தோறும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.ஊட்டி- குன்னுார் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்ப்பட்டது. இதற்காக சாலையோரம் செங்குத்தாக மண் தோண்டப்பட்டது. சில இடங்களில் மழை நீர் செல்லும் கல்வெட்டுகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவு பெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது. மழை காலங்களில் விழும் மண்சரிவு அகற்றப்படாமல் உள்ளது.அருவங்காடு முதல் பாய்ஸ்கம்பனி வரையில், விரிவாக்கத்தின் போது, ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு தார் கலவையிடாமல் பணிகள் பாதியில் விடப்பட்டதால், பெரிய கால்வாய் போன்ற குழி ஏற்பட்டுள்ளது. மேடு பள்ளமாக உள்ள சாலையில் தடுமாறி செல்லும் வாகனங்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆம்புலென்ஸ்களில் நோயாளிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையினால், அருவங்காடு -பாய்ஸ் கம்பெனி வரையில், 3 அடி ஆழத்திற்கு சாலையோரத்தில் குழிகள் ஏற்பட்டுள்ளது. ஊட்டிக்கு செல்லும் முக்கிய சுற்றுலா வழித்தடமாக உள்ள இந்த சாலையில், தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலிகளும் தொடர்கிறது. வாகனங்களும் பழுதடைகின்றன. கோடை சீசன் துவங்கும் போது நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை