மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
குன்னூர் : குன்னூரில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி வைத்த தி.மு.க., நிர்வாகி உட்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினருக்கு வனவிலங்குகள் வேட்டையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதன் பேரில் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் நடத்திய சோதனையில், வண்டிச்சோலை சரவணமலை அருகே, வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகளுடன் கோடமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (தி.முக., நிர்வாகி), ஜீவரத்தினம், ஜீவக்குமார் ஆகியோர் பிடிபட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆர்செடின் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் நாட்டு வெடிகளை சப்ளை செய்ததும், விற்பனை செய்ய இறைச்சிகளை வாங்கி வந்ததும் தெரிய வந்தது.தொடர்ந்து இன்று பிரேம்குமார் உட்பட 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும்வேட்டையாட பயன்படுத்திய கார் மட்டும் இரு சக்கர வாகனம், காட்டு பன்றிக்கு வைக்கும் அவுட்டு காய் எனும் நாட்டு வெடிகள், காட்டு கோழிக்கு வைக்கும் சுருக்கு வலை, காட்டு பன்றியை சுத்தம் செய்யும் கருவி, கத்தி உள்ளிட்ட பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.இதில் குன்னூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மீனாவின் கணவரும், வண்டிச்சோலை ஊராட்சி செயலாளருமான ஆனந்த் ராஜ் கைது செய்த சம்பவம் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
03-Oct-2025