உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட, சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மற்றும் பைக்கார உள்ளிட்ட மையங்களில், சாதாரண நாட்களில் கூட, சுற்றுலா பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், குடியரசு தினத்தை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்கள், தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேற்று ஊட்டியில் குவிந்தனர்.குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட மையங்களில், குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் இதமான காலநிலையில், பூங்கா புல்தரையில் விளையாடி மகிழ்ந்தனர். ஏரியில் படகு சவாரி செய்தும் குதுாகலமடைந்தனர்.சுற்றுலா பயணிகள் வருகையால், ஊட்டி நகர சாலைகளில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. காலை முதல் மாலை வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை