உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்தீயில் புல்வெளிகள் எரிந்து பாதிப்பு

வனத்தீயில் புல்வெளிகள் எரிந்து பாதிப்பு

கூடலுார் : கூடலுார் பகுதியில் இரவு மற்றும் அதிகாலையில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக, வனப்பகுதியில் புல்வெளிகள் பசுமையிழந்து கருக துவங்கி உள்ளன. இதனால், தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோழிக்கோடு சாலை மரப்பாலம் அருகே உள்ள, வனப்பகுதியில், நேற்று, மாலை, 4:15 மணிக்கு வனத்தீ ஏற்பட்டது. தகவல் அறிந்த வன காவலர் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர் வாசுதேவன் வனத்தீயை கட்டுப்படுத்தினர். வனத்தீயில் கால் ஏக்கர் பரப்பிலான புல்வெளிகள் எரிந்து நாசமானது.வனத்துறையினர் கூறுகையில், 'வனத்தீ குறித்த தகவல் கிடைத்த உடன், வன ஊழியர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி, அவை மேலும் பரப்புவதை தடுத்தனர். வனத்தீ ஏற்படுவது தடுக்க வனத்துறை எடுத்து வரும், நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்