உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை அச்சத்தில் டான்டீ தொழிலாளர்கள்

ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை அச்சத்தில் டான்டீ தொழிலாளர்கள்

கூடலுார்; கூடலுார் பாண்டியார் டான்டீ குடோன் அருகே, காட்டு யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்திய சம்பவத்தால் டான்டீ தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுார் கோழிக்கோடு சாலை குடோன் அருகே, பாண்டியார் டான்டீ சரகம்- 3-பி பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே அப்பகுதியில், ரேஷன் கடை கட்டடத்தை பலமுறை காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால், ரேஷன் கடை பக்கத்தில் உள்ள மற்றொரு அறைக்கு கடையை மாற்றினர். அதனையும் யானை சேதப்படுத்தியது. இதனை தடுக்க, ரேஷன் கடையில் முன்பகுதியில், இரவில் காட்டு யானைகள் நுழையாத வகையில் கம்பி கட்டி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவு, 11:30 மணிக்கு, குட்டியுடன் நுழைந்த இரண்டு யானைகள், ரேஷன் கடை ஜன்னல் கதவை சேதப்படுத்தி, கடையில் பயன்படுத்தப்படும் இரும்பு டேபிளை வெளியே துாக்கி வீசியதுடன், விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களையும் சேதப்படுத்தியது. வனத்துறையினர் யானைனகளை விரட்டி, கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.சேதமடைந்த ரேஷன் கடையை, நெல்லிபாளையம் நகராட்சி துணைத் தலைவர் நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன், டான்டீ உதவி நடத்துனர் யோகராஜ் ஆய்வு செய்தனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'டான்டீ தேயிலை தோட்டத்தை ஒட்டிய வனப்பகுதிக்கு முகாமிடும் காட்டு யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்தியது, போன்று குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தும் ஆபத்து உள்ளது.இதனை தடுக்க, வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை