உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேர்நிலை சுவரில் தெய்வ ஓவியம்

தேர்நிலை சுவரில் தெய்வ ஓவியம்

மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவில் தேர்நிலை சுவரையொட்டி குப்பை வீசப்படாமல் இருக்க, தெய்வங்களின் படங்கள் ஓவியமாக வரையப்பட்டன.காரமடையில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமாக அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.கோவிலுக்கு எதிரில் தேர்நிலை உள்ளது. காரமடை நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டு பகுதியான மகாத்மா காந்தி சாலை செல்லும் வழியில், தேர்நிலையை ஒட்டியுள்ள சுவர் அருகே பக்தர்கள் குப்பையை வீசி செல்கின்றனர். இதனால், கோவில் அருகில் சுகாதாரமற்ற நிலை உருவானது. இதனிடையே நேற்று, இந்த வார்டு பா.ஜ., கவுன்சிலர் விக்னேஷ் குப்பையை சுத்தம் செய்து மற்றும் சுவரில் அனுமன், அரங்கநாதர், தேர் படங்களை ஓவியம் வரைய ஏற்பாடு செய்தார். சுவரில் தெய்வங்களின் ஓவியம் வரையப்பட்டதால், அங்கு குப்பையை பக்தர்கள் வீசமாட்டார்கள் என நம்பப்படுகிறது.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்