மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
16 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
16 hour(s) ago
குன்னுார்:குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட பரசுராம் தெரு பாலம் இடிக்கப்பட்டு சீரமைக்காத நிலையில், பள்ளி குழந்தைகள் உட்பட மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 12 வது வார்டில் பரசுராம் தெரு உள்ளது. இப்பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம் சாலையை இணைக்கும் பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதற்காக ஜல்லி கற்கள் கிருஷ்ணாபுரம் சாலையில் கொட்டப்பட்டுள்ளது.பாலம் பணிகள் துவங்கப்படாத நிலையில், மக்கள் அருகில் உள்ள பாலம் வழியாக சுற்றி நடந்து வருகின்றனர். பாலம் இடிக்கப்பட்ட இடத்தில் கிருஷ்ணாபுரம் சாலையில் கொட்டப்பட்ட ஜல்லியால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுகிறது.மக்கள் கூறுகையில், 'கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாலம் இடிக்கப்பட்டது ஜல்லியை, சாலையில் கொட்டி சென்று விட்டனர். அதன் பிறகு பணிகள் எதுவும் நடக்காத நிலையில் பள்ளி குழந்தைகள் ஆற்றோர பகுதியில் நடந்து செல்லும் போது தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, பணிகளை துரிதப்படுத்தி பாலத்தை சீரமைப்பதுடன், இந்த பகுதியிலும் வீடுகள் உள்ள இடங்களில் 'இன்டர்லாக்' கற்கள் பதிக்க வேண்டும்,' என்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago