உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழநி, சென்னி மலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை

பழநி, சென்னி மலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை

கருமத்தம்பட்டி;தைப்பூசத்தை ஒட்டி, சூலூர் வட்டார முருக பக்தர்கள், பழநி மற்றும் சென்னிமலைக்கு காவடிகளுடன் பாத யாத்திரையை துவக்கினர்.தைப்பூசத்தை ஒட்டி, மருதமலை, பழநி, சென்னிமலை உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கு, முருக பக்தர்கள் தீர்த்தக்காவடி, பன்னீர் காவடி, உள்ளிட்ட பல வகையான காவடிகளை சுமந்து பாதயாத்திரையாக சென்று, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம்.அனைத்து முருகன் கோவில்களிலும், வரும், 26ம் தேதி தைப்பூச வழிபாடுகள் நடப்பதை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில், ஊஞ்சபாபளையம், வடுகபாளையம், கிட்டாம்பாளையம், வாகராயம்பாளையம், காங்கயம் பாளையம், செங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, முருக பக்தர்கள், காவடிகள் சுமந்து, பாதயாத்திரையை துவக்கினர்.கோவில்களில் காவடி பூஜைகள் செய்து, பாதயாத்திரையை சரண கோஷங்களுடன் துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை