உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தனியார் மொபைல் டவரில் டீசல் திருட்டு: ஜீப் பறிமுதல்; தப்பிய கும்பலுக்கு வலை

தனியார் மொபைல் டவரில் டீசல் திருட்டு: ஜீப் பறிமுதல்; தப்பிய கும்பலுக்கு வலை

பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில் தனியார் மொபைல் போன் டவர் அமைந்துள்ளது. இந்த டவரில், டீசல் டாங்க் வைத்துள்ள பகுதிக்கு இரண்டு பேர் இரவில் வந்துள்ளனர். அதில், டீசலை திருடி ஜீப்பில் எடுத்து சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை கோவையில் உள்ள டவர் பொறுப்பாளர் வேணுகோபால் என்பவர் அலுவலகத்தில் இருந்து பார்த்துள்ளார். உடனடியாக தேவாலா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் டீசல் திருட்டு கும்பல் தப்பி உள்ளது. 'சிசிடிவி 'கட்சிகளை வைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி தலைமையிலான போலீசார், ஆய்வு செய்து டீசல் கடத்த பயன்படுத்தப்பட்ட ஜீப்பை பறிமுதல் செய்தனர். தப்பி சென்றுள்ள திருட்டு கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ