மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
18 hour(s) ago
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாய தோட்டங்களில் உருளை கிழங்கு எடுக்கும் சீசன் களை கட்டியுள்ளது; நஷ்டமில்லாத விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக, உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளில் உருளை கிழங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மலை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளை கிழங்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது, ஊட்டியின் பல்வேறு கிராமப்புறங்களில் உருளை கிழங்கு எடுக்கும் சீசன் துவங்கியுள்ளது. இதனால், விவசாய தொழிலாளர்கள் குளிரான காலநிலையை பொருட்படுத்தாமல், தோட்டங்களில் முகாமிட்டுள்ளனர். கப்பத்தொரை, முத்தோரை, பாலாடா உட்பட பல்வேறு பகுதிகளிலும் உருளை கிழங்கு எடுக்கும் பணி களை கட்டியுள்ளது. கடந்த ஆண்டை போல் அல்லாமல், இந்த ஆண்டு உருளை கிழங்குக்கு கூடுதல் விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்ட உருளை கிழங்கு உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,''ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைக்கு தயாரான உருளை கிழங்கு எடுக்கப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இந்த ஆண்டு இறுதிவரை உருளை கிழங்கு எடுக்கும் சீசன் களை கட்டும். தற் போதைய நிலவரப்படி ஒரு துண்டு கிழங்கு மூட்டை (45 கிலோ) 600 ரூபாய் முதல், 750 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நீலகிரியில் இருந்து தனியார் மூலம் சுமார் 20 லாரி லோடும், ஊட்டி என்.சி.எம்.எஸ்., மூலம் 11 லாரி லோடும் உருளை கிழங்கும் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த விலையால், உருளை கிழங்கு விவாயிகள் ஒரளவு மகிழ்ச்சியடைந்துள்ளனர்,'' என்றார்.
18 hour(s) ago