உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உதவி தொகை பெற அழைப்பு

உதவி தொகை பெற அழைப்பு

ஊட்டி : மாற்று திறனாளிகளில் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மாற்று திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் கடந்த காலாண்டு வரை 226 பதிவுதாரர்கள் பயன்பெற்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரை பதிவு செய்து ஓராண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்து காத்திருக்கும், பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கு சமமான படிப்புக்கு 375 ரூபாய், பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 450 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பதிவினை விடுபாடின்றி புதுப்பித்த தாழ்த்தப்பட்ட பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதுக்குள்ளும், மற்றவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். அரசு, தனியார் துறையிலோ, சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபட்டிருக்க கூடாது; விண்ணப்ப படிவம் கிடைத்த 30 நாட்களுக்குள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் சேமிப்பு கணக்கை துவக்கி எண் மற்றும் கிளை முழு முகவரியை படிவத்தில் சேர்த்திருக்க வேண்டும். எனவே, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு, தனபாலன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை