மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலூர் : முதுமலை வனப்பகுதியில் புள்ளிமானை அடித்து கொன்றது தொடர்பாக 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், முதுமலை அருகே முதுகுழி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இறந்த புள்ளிமான் ஒன்றை ஒரு கும்பல் தூக்கி வந்தது. அக்கும்பலை சேர்ந்த 6 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்; இறந்த மானையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், இறைச்சிக்காக மான் வேட்டையாடியது தெரியவந்தது. இது தொடர்பாக, முதுகுழி பகுதியை சேர்ந்த சிவக்குமார்(32), சீனிவாசன்(22), உதயகுமார்(24), மணிகண்டன்(22), சரவணன்(19), பிரஞ்சித்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், பிரஞ்சித் வேட்டை தடுப்புகாவலராக பணியாற்றி வந்துள்ளார். ஏற்கனவே, அடித்து கொல்லப்பட்டு, உலர வைக்கப்பட்ட இன்னொரு மானின் இறைச்சியையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வேட்டையாடப்பட்ட ஆண் மானுக்கு 5 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.
03-Oct-2025