மேலும் செய்திகள்
ஏற்காட்டில் 11வது சர்வதேச காபி தின கலந்துரையாடல்
07-Oct-2025
ஊட்டி; ஊட்டி பிரம்ம குமாரிகள் மையத்தில், மாற்று திறனாளிகள் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி பிரம்ம குமாரிகள் இயக்கம், மத்திய; மாநில அரசுகளுடன் இணைந்து, மாற்று திறனாளின் சமத்துவம், பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் போன்றவற்றுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஊட்டி பிரம்ம குமாரிகள் மையத்தில், மாற்று திறனாளிகள் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில், ஊட்டி வாழ் மருத்துவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று மாற்று திறனாளிகளுக்கு செய்ய வேண்டிய பணிகள், பாதுகாப்பு குறித்து பேசினர். நிர்வாகி சவ்பிக் அவர்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து பேசினார். பிரம்மகுமாரி ராஜேஸ்வரி மற்றும் ரவி, கெட்டன், கணேஷ் ராமலிங்கம், நஞ்சன், சுரேஷ்பாபு, சாந்தா உட்பட பலர் பங்கேற்றனர்.
07-Oct-2025