உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பேரிடர் தடுப்பு நடவடிக்கை; ஊட்டியில் ஆய்வு கூட்டம்

பேரிடர் தடுப்பு நடவடிக்கை; ஊட்டியில் ஆய்வு கூட்டம்

ஊட்டி : ஊட்டியில் மாநில திட்டக்குழு ஆணைய சார்பில், வடகிழக்கு பருவ மழை பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.மாநில திட்டக்குழு ஆணைத்தின் துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆணையத்திடம் கூறியதாவது:மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறை, தீயணைப்பு துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களிடம் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மேலும், மாவட்டத்தில், 283 அபாயகரமான பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளை கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க, 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தவிர, நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி துறையின் கீழ் வரும் 'கல்வெட்கள்' மற்றும் கால்வாய்களை துாரவார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதில், திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சீனிவாசன், விஜயபாஸ்கர், கூடுதல் கலெக்டர் சங்கீதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் பாலுசாமி உட்பட, அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை