மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
9 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
9 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
9 hour(s) ago
பந்தலுார்:பந்தலுார் பகுதியில் மக்கள் சேவையாற்ற தேர்வு செய்யப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், ஒப்பந்த பணியில் நேரடியாக ஈடுபடுவதில் ஆர்வம் காட்டி வருவது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.உள்ளாட்சி தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர், அரசுத்துறை அதிகாரிகள் - மக்களுக்கு பாலமாக நின்று, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.இந்நிலையில், நெல்லியாளம் நகராட்சி மற்றும் சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சில கவுன்சிலர்கள் அரசுத்துறை அதிகாரிகள் ஆதரவுடன், ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து, லாபம் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால், மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது விதிமுறை மீறலாக இருந்த போதும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago