மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
14 minutes ago
ஊட்டி மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள்
15 minutes ago
பந்தலுாரில் பறக்கும் நீலப்புலி வண்ணத்து பூச்சிகள்
16 minutes ago
குன்னுார்: குன்னுார் உட்பட மாவட்டத்தின் பல இடங்களில் பல்வேறு திட்டங்களின் கீழ், அரசு கட்டடங்கள் கட்டப்பட்டு செயல்படாமல் உள்ளது. மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்டு வருவது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குன்னுார் எடப்பள்ளி ஊராட்சி அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள இடத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் தற்போது புதர்கள் சூழ்ந்து பயனில்லாமல் கிடக்கிறது. இதன் அருகிலேயே கடந்த, 2022--23 நிதியாண்டில், தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில், 12.85 லட்சம் ரூபாய் மதிப்பில், பணி கூடம் பெயரில் கட்டடம் கட்டி பூட்டப்பட்டு கிடக்கிறது. தற்போது, 22 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் கிளை நூலகம் கட்டி, பணியின் அறிவிப்பு பலகைகூட வைக்காமல், திறப்பு விழாவிற்காக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர் காணொளி வாயிலாக நுாலகத்தை திறந்து வைக்கும் தேதிக்காக காத்திருக்கிறது. அவசர கதியில்கட்டட பணி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் பொதுப்பணித்துறையால் செயல்படுத்தப்படும் போது குறிப்பிட்ட துறைகளில் நடைமுறை சிக்கல்கள் குறித்து முழுமையாக கேட்டறியாமல் அவசரகதியில் இடங்களை தேர்வு செய்து பணிகளை முடித்து விடுகின்றனர். சில இடங்களில் ஆளும்கட்சியினரின் கட்டாயத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்படுகிறது. அந்தந்த துறைகளின் கீழ் உள்ள கட்டடங்கள் பயனற்று கிடந்தாலும் மாற்று துறைகளின் பயன்பாட்டுக்கு, நடைமுறை சிக்கல்களால் வழங்கப்பட முடியாத சூழல் தொடர்கிறது. இதனால், பராமரிப்பில்லாத பல கட்டடங்கள் எதற்கும் பயனில்லாமல் வீணாகும் சூழல் மாவட்ட முழுவதும் தொடர்கிறது. இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது. கருத்து கேட்க வேண்டும் இளித்தொரை விவசாயி மற்றும் சமூக ஆர்வலர் விஸ்வநாதன் கூறுகையில், ''அரசியல் வாதிகள், அரசு துறையினருக்கு எந்த திட்டம் எங்கு கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாடு இல்லாமல், அரசின் திட்டங்களை அவசரகதியில் ஏதாவது ஒரு இடத்தில் செயல்படுத்தி விடுகின்றனர். மக்களுக்கு பயன்படாத இடங்களில் கட்டடங்களை கட்டி அரசின் நிதியை வீணடிக்கின்றனர். திட்டங்களை செயல்படுத்தும்போது, அப்பகுதி மக்களிடம் எந்தவித கருத்துக்களையும் கேட்பதில்லை. இதேபோல, மாவட்டத்தின் பல இடங்களில் மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் பயன்படுத்தாமல் வீணாகி வருகின்றன. இதனால், பல லட்சம் ரூபாய் மக்களின் வரிபணம் வீணாகி வருகிறது. அவற்றை கணக்கெடுப்பு நடத்தி, பிற அரசு துறைகளின் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் மக்களின் கருத்து கேட்டபின்பு புதிய கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
14 minutes ago
15 minutes ago
16 minutes ago