தி.மு.க. கவுன்சிலர்களை கண்டித்து நகராட்சியில் ஆர்ப்பாட்டம்
குன்னுார்; தி.மு.க. கவுன்சிலர்கள் தரக்குறைவாக பேசுவதாக கூறி, நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குன்னுார் நகராட்சியில், கடந்த மாத இறுதியில் நடந்த நகராட்சி சாதாரண கூட்டத்தில் கமிஷனர் லஞ்சம் வாங்குவதாக தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், நேற்று குன்னுார் நகராட்சி ஊழியர் சங்கம் சார்பில், அதிகாரிகளையும், ஊழியர்களையும் தரக்குறைவாக, தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் பேசுவதாக கூறி, நேற்று மாலை, ஊழியர்கள் நகராட்சி அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தி கோஷம் எழுப்பினர். போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.