உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை, காதல் வலைகளில் சிக்காதீர்கள்

போதை, காதல் வலைகளில் சிக்காதீர்கள்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமையாசிரியை மார்கிரேட் அறிவுரையின் பேரில் நடந்த இந்த பேரணி, பள்ளி வளாகத்தில் துவங்கிய முக்கிய வீதி வழியாக பஸ் ஸ்டாண்டை அடைந்தது. நிறைவாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, குன்னூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தினகரன் பேசுகையில், தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் மாணவர் போதை உள்ளிட்ட தவறான பாதையில் செல்வதை தவிர்த்து, கல்வி, விளையாட்டு போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி நல்ல பாதையில் செல்ல வேண்டும். இதனால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். ஆசை என்பது அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இருக்க வேண்டும். பேராசையாக மாற கூடாது. பெற்றோரின் கஷ்டங்களை மாணவர்கள் புரிந்து கொண்டு, எதற்கும் அடம்பிடிக்காமல் அவர்களின் அறிவுரையை கேட்பது அவசியம். மாணவ பருவத்தில், காதல் வலையில் சிக்குவதால் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர், என்றார். பேரணியில், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஞான சவுந்தரி, ஆசிரியர்கள் லாவண்யா, சந்திரிகா, பிலோமினா அந்தோணியம்மாள், தனலட்சுமி, ஷாலினி, தங்கமுத்து, சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை